திட்டமிட்டபடி நீட் தேர்வு - வெளியானது ஹால் டிக்கெட்

NEET NEET2021
By Petchi Avudaiappan Sep 06, 2021 08:53 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in சமூகம்
Report

நீட் தேர்வை ஒத்திவைக்க கோரிய வழக்குகளை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ள நிலையில் ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் இந்த ஆண்டுக்கான இளங்கலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு செப்டம்பர் 12 ஆம் தேதி நடைபெறும் என்று தேசிய தேர்வுகள் முகமை அறிவித்துள்ளது. விண்ணப்பங்கள் அனுப்பும் பணி கடந்த ஜூலை 13 ஆம் தேதி தொடங்கியது.

காலம் என்பதால் மாணவர்களின் நலன் கருதி நீட் தேர்வு நடக்கும் நகரங்கள் எண்ணிக்கை 155 இல் இருந்து 198 ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனிடையே சிபிஎஸ்இ தொடர்பான தேர்வுகளும் அடுத்தடுத்து நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டதால் நீட் தேர்வு எழுதுவதில் மாணவர்களுக்கு குழப்பம் ஏற்படலாம் என கருதி நீட் தேர்வை ஒத்திவைக்க கோரி உச்சநீதிமன்றத்தில் பல்வேறு தரப்பில் இருந்து வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரணை செய்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் நீட் தேர்வை 16 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர். ஆனால் ஒருசில மாணவர்களின் வேண்டுகோளுக்கிணங்க அதனை ஒத்திவைக்க முடியாது. இதனை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம். திட்டமிட்டபடி நீட் தேர்வு கட்டாயம் நடந்தே தீரும். அதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை என்று கூறி வழக்குகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இந்நிலையில் நீட் தேர்வு ஹால் டிக்கெட்டும் வெளியிடப்பட்டுள்ளது. புதிய ஹால் டிக்கெட்டுகளை http://neet.nta.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.