நீட் தேர்வு தோல்வி பயத்தால் மாணவி துாக்கிட்டு தற்கொலை
நீட் தேர்வு தோல்வி பயத்தில் மாணவி துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தென்காசி மாவட்டம் குலசேகரமங்கலத்தை சேர்ந்தவர் அமல்ராஜ் கூலி தொழிலாளியான இவருக்கு ராஜலட்சுமி (21) என்ற மகளும் உதயஜோதி (19) என்ற மகனும் உள்ளனர்.
தோல்வி பயம்
ராஜலட்சுமி பிளஸ் 2 படித்து விட்டு மருத்துவ படிப்பில் சேருவதற்காக கடந்த 2 ஆண்டுகளாக நீட் தேர்வு எழுதினார். அவர் எழுதிய நீட் தேர்வில் தொடர் தோல்வியை தழுவினார்.
இதையடுத்து சங்கரன்கோவிலில் உள்ள தனியார் பயிற்சி மையத்தில் சேர்ந்து படித்து 3-வது முறையாக மீண்டும் தேர்வு எழுதினார்.
வருகிற 7-ம் தேதி நீட் தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளன. இதையொட்டி நீட் தேர்வுக்கான விடைகளும் இணையதளத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வெளியானது.
மாணவி தற்கொலை
விடைகளை ஆன்லைனில் பார்த்த ராஜலட்சுமி தேர்வில் தோல்வி அடைந்து விடுவேன் என்றும், தன் மருத்துவ கனவு சிதைந்து போனதாகவும் குடும்பத்தினரிடம் கூறியுள்ளார்.
இதை கேட்ட அவரது பெற்றோர் மாணவியை சமாதானம் பெய்துள்ளனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் ராஜலட்சுமி வீட்டில் துாக்கியிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நீட் தேர்வு தோல்வி பயத்தால் மாணவி துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.