நீட் தேர்வு குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு!
நீட் தேர்வு குறித்து வெளியான தகவல் தவறானது என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.
கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில், மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வை மத்திய அரசு ரத்து செய்தது.
அதேபோல் தமிழக அரசும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்தது. இந்நிலையில் நீட் தேர்வு நடக்குமா நடக்காதா என்று குழப்பமான சூழலுடன் மாணவர்கள் காத்திருக்கின்றனர்.
இதனிடையே செப்டம்பர் 5ஆம் தேதி நீட் நுழைவுத் தேர்வு நடைபெற இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால் நீட் தேர்வு குறித்து எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை என்றும், தேர்வை எப்போது நடத்துவது என்பது குறித்து ஆலோசித்து வருவதாகவும் தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.