ரத்தாகுமா நீட் தேர்வு , குடியரசு தலைவர் எடுத்த நடவடிக்கை என்ன ?

NEET Draupadi Murmu
By Irumporai Mar 14, 2023 10:47 AM GMT
Report

நீட் விலக்கு மசோதா தொடர்பாக மதுரை எம்.பி. வெங்கடேசனுக்கு  குடியரசுத்தலைவர் பதில் அளித்துள்ளார்.

திமுக அரசு தனது தேர்தல் பிரச்சாரத்தில் பிரதான வாக்குறுதியாக கூறியது தாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வை ரத்து செய்வோன் எனக் கூறினர்.

நீட் ரகசியம்

இந்த நிலையில் நீட் தேர்வை ரத்து செய்வது தொடர்பான ரகசியம் என்னிடம் உள்ளது என அமைச்சர் உதயநிதிஸ்டாலின் இன்று நிகழ்ச்சி ஒன்றில் கூறினார் அதில் நீட் தேர்வை ரத்து செய்யும் வரை அதற்கு எதிரான போராட்டங்கள் தொடரும் என்று பிரதமர் மோடியிடம் கூறியதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.

  இந்த நிலையில் மதுரை எம்பி சு.ப வெங்கடேசன் தனது ட்விட்டர் பதிவில் :

ரத்தாகுமா நீட் தேர்வு , குடியரசு தலைவர் எடுத்த நடவடிக்கை என்ன ? | Neet Exam Anitha Supreme Court Presedent Order

அனித்தாக்களின் கல்வி உரிமை; குடியரசு தலைவரின் பதிலும் முதல்வரின் பெயர் சூட்டலும். தமிழ்நாடு சட்டமன்றம் நிறைவேற்றிய நீட் ஒழிப்பு மசோதாவுக்கு உள்துறை அமைச்சகத்தை விரைவு செய்து ஒப்புதல் தரக் கோரி குடியரசு தலைவருக்கு கடிதம் எழுதியிருந்தேன் “உள்துறை அமைச்சகத்தின் மேல் நடவடிக்கைக்காக அனுப்பப்பட்டுள்ளதாக” குடியரசு தலைவர் இன்று பதிலளித்துள்ளார்.

அரியலூர் மருத்துவ கல்லூரி அரங்கத்திற்கு அனிதாவின் பெயர் சூட்டி இன்று தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். மருத்துவ அரங்கும், மருத்துவக்கல்வியும் அனித்தாக்களுக்கானது. அதை பறிப்பதை தடுக்கும் நீட் ஒழிப்பு மசோதாவுக்கு உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும். தமிழகத்தின் கனவு அனித்தாக்களின் கல்வி உரிமையை நிலைநாட்டுவதே என குறிப்பிடுள்ளார்.