நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தில் தமிழக அரசு நிச்சயம் வெற்றி பெறும் - அமைச்சர் அதிரடி

minister exam neet byte anbil mahesh
By Anupriyamkumaresan Sep 12, 2021 06:46 AM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in தமிழ்நாடு
Report

தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் நீட் தேர்வை ரத்து செய்யவேண்டும் என்பதில் ஒருமித்த நிலைப்பாட்டில் உள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

திருச்சி மாநகராட்சி 61-வது வார்டுக்கு உட்பட்ட திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் காவேரி நகர் பகுதியில் 2020 மற்றும் 21-வது நிதி ஆண்டில் தனது தொகுதி வளர்ச்சி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.16 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய நியாய விலைக்கடையை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார்.

நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தில் தமிழக அரசு நிச்சயம் வெற்றி பெறும் - அமைச்சர் அதிரடி | Neet Exam About Minister Anbil Mahesh Byte Trichy

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக முதல்வர் சட்டமன்றத்தில், நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரும் போது அனைத்துக் கட்சியினரும் ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டதாகவும், அவரது கோரிக்கைக்கு பா.ஜ.க உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் ஆதரவு தெரிவித்ததாகவும் கூறினார்.

மேலும், இன்று நடக்கும் நீட் தேர்வு தமிழகத்தில் கடைசி நீட் தேர்வாக இருக்குமா? என்ற கேள்விக்கு நீட் தேர்வு எதிர்த்து போராடுகிறோம் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. அனைத்து கட்சிகளின் ஒத்துழைப்போடு வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை தமிழக முதல்வருக்கும் உள்ளது என்று கூறியுள்ளார்.