நீட் நுழைவுத் தேர்வு ஜூலை 17-ம் தேதி நடைபெறும் - தேசிய தேர்வு முகமை அறிவிப்பு
neet2022
neetdateannounced
neetonjuly17
mbbsbds
By Swetha Subash
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். ஆகிய இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான தேசிய அளிவிலான நுழைவு தகுதி தேர்வுக்கான (நீட்) தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
நடப்பாண்டுக்கான நீட் நுழைவுத் தேர்வு ஜூலை 17-ம் தேதி நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
இந்தி, தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளில் நடத்தப்படும் இந்த தேர்வுக்கு ஏப்ரல் 2-ம் தேதி முதல் மே 7-ம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது ஏதேனும் பிழை ஏற்பட்டால் திருத்தம் மேற்கொள்ள 5 நாள் அவகாசம் அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.