நீட் நுழைவுத் தேர்வு ஜூலை 17-ம் தேதி நடைபெறும் - தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

neet2022 neetdateannounced neetonjuly17 mbbsbds
By Swetha Subash Mar 31, 2022 06:49 AM GMT
Swetha Subash

Swetha Subash

in கல்வி
Report

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். ஆகிய இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான தேசிய அளிவிலான நுழைவு தகுதி தேர்வுக்கான (நீட்) தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

நடப்பாண்டுக்கான நீட் நுழைவுத் தேர்வு ஜூலை 17-ம் தேதி நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

நீட் நுழைவுத் தேர்வு ஜூலை 17-ம் தேதி நடைபெறும் - தேசிய தேர்வு முகமை அறிவிப்பு | Neet Enterance Exam Date Announced

இந்தி, தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளில் நடத்தப்படும் இந்த தேர்வுக்கு ஏப்ரல் 2-ம் தேதி முதல் மே 7-ம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது ஏதேனும் பிழை ஏற்பட்டால் திருத்தம் மேற்கொள்ள 5 நாள் அவகாசம் அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.