துரத்தும் நீட் .. தொடரும் தற்கொலைகள் - மேலும் ஒரு மாணவி தற்கொலை
வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே தலையாரம்பட்டு கிராமத்தில் சௌந்தர்யா என்ற மாணவி நீட் தோல்வி பயத்தால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் நாடு முழுவதும் நீட் தேர்வு அமலுக்கு வந்தது. அப்போது முதலே தமிழகம் தொடர்ந்து நீட்டுக்கு விலக்கு கேட்டு வருகிறது.
ஒரு பக்கம் அரசியல் தலைவர்கள் நீட்டுக்கு விலக்கு கேட்டு வந்தாலும் மாணவர்கள் நீட் எழுத வேண்டிய கட்டாயம் உள்ளது. இந்த நிலையில் மாணவ / மாணவிகள் நீட் தேர்வு பயத்தாலும் நீட் தோல்வி பயத்தாலும் தொடர்ந்து தற்கொலை செய்து கொள்கின்றனர்.
இந்த நிலையில் 2021 ஆம் ஆண்டு நீட் தேர்வு எழுதுவதற்கு முன்னர் தனுஷ் என்ற மாணவர் மற்றும் அரியலூரை சேர்ந்த மாணவி கனிமொழி என இருவர் தற்கொலை செய்து கொண்டனர்.
இன்று மீண்டும் வேலூர் மாவட்டம் காட்பாடியை சேர்ந்த சௌந்தர்யா என்னும் மாணவி நீட் தேர்வு எழுதிய நிலையில் தோல்வி பயத்தால் தற்கொலை செய்து கொண்டார்.
வேலூர் மாவட்டம் தோட்டபாளையம் பள்ளியில் படித்த 12 ஆம் வகுப்பு மாணவி 510 மதிப்பெண்கள் பெற்றிருந்தார் இந்த நிலையில் இவர் கிங்ஸ்டன் பொறியல் கல்லூரியில் நீட் தேர்வு எழுதி இருந்தார்
நீட் தேர்வில் தான் தோல்வியடைந்து விடுவோம் என்று பெற்றோரிடம் கூறி அழுத வண்ணம் இருந்த அவர் இன்று புடவையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.