நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது: மத்திய அரசு தகவல்!
india
goverment
Neet
By Irumporai
கொரோனா 3-வது அலை அச்சுறுத்தலால் நீட் மற்றும் பிற பொது தேர்வுகளை ஒத்திவைக்க முடியது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸின் 3-வது அலை பரவல் வரும் என மருத்துவ வல்லுநர்கள் எச்சரிப்பதால் நீட் தேர்வை ஒத்தி வைக்குமாறு பல தரப்பினரும் கோரிக்கையை முன் வைத்து வருகின்றனர்.
அந்த வகையில், மக்களவையில், திமுக எம்.பி.தமிழச்சி தங்கபாண்டியனின் கேள்விக்கு மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர் பிரவீன் பாரதி பதிலளித்துள்ளார்.

அவரது பதிலில்: கொரோனா 3-வது அலை அச்சுறுத்தலால் நீட் மற்றும் பிற பொது தேர்வுகளை ஒத்திவைக்கும் திட்டமில்லை.
நடப்பாண்டு செப்டம்பர் 12-ம் தேதி மருத்துவப்படிப்புக்கான நீட் நுழைவுத்தேர்வு நடத்தப்படவுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.