நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம்- ராப் பாடகர் ‘தெருக்குரல்’ அறிவு கைது

Tamil nadu
By Vinoja Jul 21, 2026 01:25 PM GMT
Report

 நீட் தேர்வு வினாத்தாள் முன்கூட்டியே வெளியான விவகாரத்தில், மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் எனக் கோரி டெல்லியில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக, காக்ரோச் ஜனதா பார்டி சார்பில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தின் போது காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டனர்.

நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம்- ராப் பாடகர் ‘தெருக்குரல்’ அறிவு கைது | Neet Cancellation Therukural Arivu Arrested

பேரணியை தடுக்க தடியடி மற்றும் கண்ணீர் புகைக் குண்டு வீச்சு நடத்தப்பட்டதாகவும், இதில் பல மாணவர்கள் பாதிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, நாடு முழுவதும் நீட் தேர்வுக்கு எதிராகவும், மத்திய அமைச்சரின் பதவி விலகலை வலியுறுத்தியும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

ராப் பாடகர் அறிவு கைது

இந்நிலையில், சென்னையில் உள்ள தலைமைச் செயலகம் முன்பு நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி ராப் பாடகரும் தனியிசைக் கலைஞருமான ‘தெருக்குரல்’ அறிவு போராட்டத்தில் ஈடுபட்டார். அவருடன் மேலும் நான்கு பேர் கோஷங்களை எழுப்பியதாக கூறப்படுகிறது.

நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம்- ராப் பாடகர் ‘தெருக்குரல்’ அறிவு கைது | Neet Cancellation Therukural Arivu Arrested

இதையடுத்து, அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறி காவல்துறையினர் பாடகர் அறிவு உள்ளிட்டவர்களை கைது செய்து விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.

அதனை தொடர்ந்து, அவரை மீண்டும் தலைமைச் செயலகத்திற்கு அழைத்து வந்து முதல்வர் விஜய்யை சந்திக்க காவல்துறை ஏற்பாடு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.