நீட் எதிர்ப்பு மசோதா ஆளுநருக்கு அனுப்பப்பட்டது !
சட்டமன்றத்தில் மீண்டும் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்ட நீட் எதிர்ப்பு மசோதா ஆளுநர் மாளிகையில் மாலை 5.30 மணிக்கு ஒப்படைக்கப்பட்டது.
தமிழக அரசு கடந்தாண்டு செப்டம்பர் 13ம் தேதி நீட் தேர்வு விளக்கு அளிக்கும் மசோதாவை ஒரு மனதாக நிறைவேற்றியது. ஓய்வுபெற்ற நீதியரசர் ஏ.கே.ராஜன் தலைமையிலான குழு 86,342 கருத்துகளை பரிசீலித்து 164 பக்கங்களில் தமிழக அரசுக்கு அளித்த பரிந்துரையின் அடிப்படையில் அத்தகைய தீர்மானத்தை தமிழக அரசு நிறைவேற்றியது.

இந்த நிலையில் ஆளுநர் திரு ஆர்.என்.ரவி அவர்களுக்கு செப்டம்பர் 13 அன்றே கிடைக்கப்பெற்ற தீர்மானத்தை ஐந்து மாதங்கள் வேண்டுமென்றே கிடப்பில் போட்டிருந்தார். நிலையில் கடந்த பிப்ரவரி 1 ஆம் தேதி உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக இருப்பதாக உப்பு சப்பில்லாத காரணங்களை கூறி மீண்டும் தமிழக சட்டமன்றத்திற்கே திருப்பி அனுப்பினார்.
தற்போது நீட் தேர்விலிருந்து விலக்களிக்க கோரும் சட்ட முன்வரைவு தமிழ்நாடு சட்டப்பேரவையில், எந்த திருத்தமுமின்றி, இன்று மீண்டும் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. சட்டமன்றத்தில் மீண்டும் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்ட நீட் எதிர்ப்பு மசோதா ஆளுநர் மாளிகையில் மாலை 5.30 மணிக்கு ஒப்படைக்கப்பட்டது.