நீட் தேர்வுக்கான விண்ணப்ப கட்டணம் உயர்வு : கட்டண விபரம் எவ்வுளவு தெரியுமா ?
நீட் தேர்வுக்கான கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நீட் தேர்வு
தேசிய தேர்வு முகமையான( NTA)மருத்துவகல்லூரிகளில் சேர்வதற்கான நீட் நுழைவுத்தேர்வை நடத்தி வருகின்றது. இந்த நிலையில் நீட் நுழைவு தேர்வு 2023க்கான விண்ணப்பத்தை கடந்த 6-ஆம் தேதி முதல் தொடங்கியுள்ளது.
நீட் கட்டணம் உயர்வு
இந்த நிலையில் நீட் தேர்வுக்கான விண்ணப்ப கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது, அதன்படி மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவு தேர்வின் விண்ணப்ப கட்டணம் தற்போது உயர்த்தப்பட்டுள்ளது அதன்படி நீட் விண்ணப்ப கட்டணம் பொது பிரிவினருக்கு ரூ.1600-லிருந்து ரூ.1700 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
ஓபிசி பிரிவினருக்கு ரூ.1500-லிருந்து ரூ.1600 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. எஸ்சி, எஸ்டிக்கு ரூ.900-லிருந்து ரூ.1000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.