இந்த ஆண்டு நீட் தேர்வில் மூன்று பேர் 720க்கும் 720 எடுத்து சாதனை!
எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்பட மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது. இந்த தேர்வில் 720க்கு 720 மார்க் பெற்று 3 பேர் தேசிய அளவில் டாப் இடம் பிடித்தனர். ஹைதராபாத், டெல்லி, மும்பை ஆகிய நகரங்களைச் சேர்ந்த 3 பேர் 720க்கு 720 மதிப்பெண் எடுத்துள்ளனர்.
தமிழகத்தில் நாமக்கல்லைச் சேர்ந்த மாணவர் எம்.பிரவீன், நாமக்கல் தும்மங்குறிச்சியைச் சேர்ந்த மாணவி எஸ்.ஏ.கீதாஞ்சலி ஆகியோர் 710 மதிப்பெண்களுடன் மாநில அளவில் முதலிடத்தை பிடித்துள்ளனர்.
நீட் தேர்வில் ஹைதராபாத், டெல்லி, மும்பை ஆகிய நகரங்களைச் சேர்ந்த 3 பேர் 720க்கு 720 மதிப்பெண் எடுத்துள்ளனர். ஹைதராபாத்தைச் சேர்ந்த மிருணாள் குட்டேரி 2021 நீட் தேர்வில் 720க்கு 720 மதிப்பெண்கள் பெற்று அகில இந்திய ரேங்க் 1 ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.

மறுபுறம், டெல்லியைச் சேர்ந்த தன்மய் குப்தா 720க்கு 720 மதிப்பெண்கள் பெற்று அகில இந்திய அளவில் 2 ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.
மும்பையைச் சேர்ந்த கார்த்திகா ஜி நாயர் 720க்கு 720 மதிப்பெண்கள் பெற்று அகில இந்திய தரவரிசையில் 3வது இடத்தைப் பிடித்துள்ளார். நீட் தேர்வில் அகில இந்திய ரேங்க் 5 வது இடத்தை ஆக்ராவைச் சேர்ந்த நிகர் பன்சால் 715 மதிப்பெண்களுடன் பெற்றுள்ளார்.
தமிழகத்தில் நாமக்கல்லைச் சேர்ந்த மாணவர் எம்.பிரவீன், நாமக்கல் தும்மங்குறிச்சியைச் சேர்ந்த மாணவி எஸ்.ஏ.கீதாஞ்சலி ஆகியோர் 710 மதிப்பெண்களுடன் மாநில அளவில் முதலிடத்தை பிடித்துள்ளனர்.சேலத்தைச் சேர்ந்த மாணவி அர்ஜிதா 705 மதிப்பெண்கள் பெற்று 2-ம் இடத்தையும் பிடித்துள்ளனர்.
அகில இந்திய அளவில் கீதாஞ்சலி 23-வது இடத்தையும், பிரவீன் 30-வது இடத்தையும், அர்ஜிதா 60-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.