நீட் தேர்வு வினாத்தாள் கசிவு? - வெளியான தகவலால் மாணவர்கள் அதிர்ச்சி
நீட் தேர்வுக்கான வினாத்தாள் கசிந்ததாக வெளியான தகவலால் மாணவ-மாணவிகள் அதிர்ச்சியடைந்தனர்.
நாடு முழுவதும் எம்பிபிஎஸ், பிடிஎஸ், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி உட்பட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.
கொரோனா காரணமாக இந்தாண்டுக்கான நீட் தேர்வு நாளை (செப்டம்பர் 12) நடைபெற உள்ளது. இந்த தேர்வானது பிற்பகல் 2 மணிக்கு தொடங்கி 5 மணிவரை நடைபெறும்.
இதற்காக மாணவ-மாணவிகள் இறுதிக்கட்ட தயாரிப்புகளில் மாணவர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே நீட் தேர்வுக்கான வினாத்தாள் கசிந்ததாக ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டது.
இதனால் சமூக வலைத்தளங்களில் #operationNeet என்ற ஹேஷ்டேக்கில் தங்களது கருத்துகளை பதிவிட தொடங்கினர். அகில இந்திய மாணவர் கூட்டமைப்பு (AISF), இந்திய தேசிய மாணவர் சங்கம் (NSUI) ஆகியவை இந்த சம்பவம் வருத்தமளிப்பதாக தெரிவித்துள்ளது.
எனினும், நீட் தேர்வு வினாத்தாள் கசிந்ததாக கூறப்படும் தகவல் உண்மையல்ல என்று அதிகாரிகள் மறுத்துள்ளனர். இதுபோன்ற செய்திகளை நம்ப வேண்டாம் என்று மாணவ- மாணவிகளுக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்..