ஆசிய விளையாட்டில் தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்த நீரு தண்டா
ஆசிய விளையாட்டு தொடரின் துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்று இந்தியாவின் நீரு தண்டா வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.
தங்கம் வென்ற நீரு தண்டா
ஜப்பானின் அய்ச்சி-நகோயாவில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பெண்களுக்கான தனிநபர் டிராப் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் நீரு தண்டா பங்கேற்றார்.
தகுதிச் சுற்றில் 30க்கு 28 புள்ளிகள் பெற்று, இறுதிப் போட்டியிலும் சிறப்பாக செயல்பட்ட நீரு தண்டா தங்கப் பதக்கத்தை வென்றார்.
சீனாவின் சுன் யுனோங் 26 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கமும், குவைத்தின் ஹஜார் அப்துல்மாலிக் 21 புள்ளிகளுடன் வெண்கலப் பதக்கமும் வென்றனர்.
முன்னதாக பெண்களுக்கான டிராப் அணிப் போட்டியில் நீரு தண்டா, ஆஷிமா அஹலாவத் மற்றும் மனிஷா கீர் ஆகியோர் அடங்கிய இந்திய அணி வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தது.
தற்போது தனிநபர் டிராப் பிரிவில் தங்கம் வென்றதன் மூலம், இந்தப் பிரிவில் தங்கம் வென்ற முதல் இந்தியப் பெண் என்ற வரலாற்றுச் சாதனையை நீரு தண்டா படைத்துள்ளார்.
இந்தியா 5 தங்கம், 21 வெள்ளி, 21 வெண்கலம் என மொத்தம் 47 பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் 11ஆவது இடத்தில் உள்ளது.