நீரஜ் சோப்ரா கடுமையான காய்ச்சலால் அவதி- கொரோனா பரிசோதனையில் வந்த முடிவு
neeraj chopra
By Fathima
ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்த நீரஜ் சோப்ரா கடுமையான காய்ச்சலால் அவதிப்பட்டு வருகிறார்.
நடந்து முடிந்த டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தடகளப் பிரிவில் இந்திய ஈட்டி எறிதல் வீரா் நீரஜ் சோப்ரா (23) தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தார்.
இதனையடுத்து தொடர் பரிசுமழையில் நனையும் நீரஜ் சோப்ராவுக்கு, பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.
இந்நிலையில் கடுமையான காய்ச்சல் மற்றும் தொண்டை வலியால் நீரஜ் சோப்ரா அவதிப்பட்டு வருகிறார்.
இதனால் மருத்துவ சிகிச்சை பெற்று ஓய்வெடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனைதொடர்ந்து அவருக்கு எடுக்கப்பட்டு கொரோனா பரிசோதனையில் நெகடிவ் என வந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.