‘தங்க மகன்’ நீரஜ் சோப்ரா வெளியிட்ட மாஸான வீடியோ - இணையதளத்தில் வைரல்...!
சமூகவலைத்தளங்களில் இந்தியாவின் தங்க மகன் நீரஜ் சோப்ராவின் வீடியோ வைரலாகி வருகிறது.
நீரஜ் சோப்ரா
2003 ஆம் ஆண்டு வெண்கலம் வென்ற நீளம் தாண்டுதல் வீராங்கனை அஞ்சு பாபி ஜார்ஜுக்குப் பிறகு, உலக தடகள சாம்பியன்ஷிப்பில் பதக்கம் வென்ற 2வது இந்தியர் மற்றும் முதல் இந்திய ஆண் தடகள வீரர் என்ற பெருமையை சோப்ரா பெற்றார்.
2008ம் ஆண்டு பெய்ஜிங் விளையாட்டுகளில் தங்கம் வென்ற துப்பாக்கி சுடும் வீரர் அபினவ் பிந்த்ராவுக்குப் பிறகு, கடந்த ஆண்டு நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்திய தடகளப் போட்டியில் சோப்ரா முதல் தங்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்தார்.
ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா சமீபத்தில் அமெரிக்காவில் நடந்த உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்று அசத்தினார்.
உலக சாம்பியன்ஷிப் தொடரின் போது காயம் ஏற்பட்டதால், காமன்வெல்த் விளையாட்டு போட்டியிலிருந்து விலகுவதாக சமீபத்தில் நீரஜ் சோப்ரா தெரிவித்தார்.
வைரலாகும் வீடியோ
இந்நிலையில், தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார் நீரஜ் சோப்ரா.
அந்த வீடியோவில் ஒரு நொடியில் விரைந்து ஓடி வந்து தடகளத்தை தாண்டியுள்ளார். தற்போது இது குறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த அவரது ரசிகர்கள் அவருக்கு பாராட்டி வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
— Neeraj Chopra (@Neeraj_chopra1) September 1, 2022