உடலை வளைத்து கடுமையாக உடற்பயிற்சி செய்த நீரஜ் சோப்ரா - வைரலாகும் வீடியோ

Viral Video
By Nandhini Feb 13, 2023 07:07 AM GMT
Report

தன் உடலை வளைத்து கடுமையாக உடற்பயிற்சி செய்த நீரஜ் சோப்ராவின் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

சாதனைப் படைத்த நீரஜ் சோப்ரா

சமீபத்தில் சுட்சர்லாந்து நாட்டின் சுரிட்ச் நகரில் டைமண்ட் லீக் தளகள போட்டிகள் நடைபெற்றது. இதில், ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவின் தங்க மகன் வீரர் நீரஜ் சோப்ரா கலந்து கொண்டார். தொடரின் இறுதிப்போட்டிக்குள் நுழைந்த அவர் 88.44 மீ தூரம் வரை ஈட்டியை எறிந்து டைமண்ட் லீக் சாம்பியன் பட்டத்தைச் தட்டிச் சென்றார். இதன் மூலம், டைமண்ட் லீக் தொடரில் நீரஜ் சோப்ரா சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்திய வீரர் என்கிற மாபெரும் சாதனை படைத்தார்.

வைரலாகும் வீடியோ

தற்போது சமூகவலைத்தளங்களில் நீரஜ் சோப்ரா ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், நீரஜ் சோப்ரா தன் உடலை வளைத்து கடுமையாக உடற்பயிற்சி செய்கிறார். தற்போது இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.   

neeraj-chopra-track-and-field-athlete