உங்கள் பிரச்சாரத்துக்கு என்னைப் பயன்படுத்தாதீர்கள்: நீரஜ் சோப்ரா காட்டம்

neerajchopra Arshad Nadeem
By Irumporai Aug 26, 2021 12:10 PM GMT
Report

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தடகளப் பிரிவில் இந்திய ஈட்டி எறிதல் வீரா் நீரஜ் சோப்ரா (23) தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்தாா். இறுதிச்சுற்றில் அவா் 87.58 மீட்டா் தூரம் எறிந்து முதலிடம் பிடித்தாா்.

நீரஜ் சோப்ரா தங்கம் வென்ற ஆகஸ்ட் 7-ம் தேதியை, தேசிய ஈட்டி எறிதல் தினமாக இந்திய தடகள சம்மேளனம் அறிவித்தது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு  ஆங்கில நாளிதழுக்கு நீரஜ் சோப்ரா பேட்டியளித்திருந்தார்.

அதில், போட்டி தொடங்குவதற்கு முன்பு தன்னுடைய ஈட்டியைத் பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம் அதை வைத்திருந்ததாகவும் பிறகு அவரிடம் நான் சென்று, அது என்னுடைய ஈட்டி. கொடுக்கவும். அதை வைத்துத்தான் போட்டியில் கலந்துகொள்ள வேண்டும் என்று தெரிவித்ததாகவும் கூறினார்.

இதைவைத்து பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீமுக்கு எதிராகச் சில பதிவுகள் சமூகவலைத்தளங்களில் வெளியான நிலையில் பாகிஸ்தான் வீரர் மீதான விமர்சனங்களுக்குக் கண்டனம் தெரிவித்து நீரஜ் சோப்ரா தனது ட்விட்டர் பதிவில் : உங்களுடைய பிரசாரத்துக்காக என்னுடைய பேட்டியைப் பயன்படுத்த வேண்டாம். ஒன்றாகவும் ஒற்றுமையாகவும் இருக்கவே விளையாட்டு கற்றுக்கொடுக்கிறது. என்னுடைய பேட்டியைக் கொண்டு சிலர் எதிர்வினையாற்றுவதைப் பார்த்து வேதனையடைந்துள்ளேன் என்று கூறியுள்ளார்.