ஆப்பிள் பழத்தில் தங்க மகன் நீரஜ் சோப்ரா ஓவியம் ..வைரலாகும் புகைப்படம்
ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவை ஓவியர் ஒருவர் ஆப்பிளில் வரைந்த படம் இணையத்தில் வைரலாகிவருகிறது. ஒலிம்பிக்கில் ஆண்கள் ஈட்டி எறிதல் போட்டியில், இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கம் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்அவரை நாடே கொண்டாடி வருகிறது
.முதல் சுற்றில் 87.03 மீ தூரமும், இரண்டாவது சுற்றில் 87.58 மீ தூரமும் ஈட்டி எறிந்து அவர் சாதனை படைத்துள்ளார். இதன் மூலம் ஒலிம்பிக் தடகள வரலாற்றில் இந்தியா தனது முதல் தங்கப்பதக்கத்தை வென்றுள்ளது.
அவருடன் சேர்ந்து இந்தியா 7 பதக்கங்களை இந்த ஒலிம்பிக்கில் பெற்றுள்ளது. இது வருங்காலத்திற்கான உத்வேகமாகவே பார்க்கப்படுகிறது.இந்த நிலையில், இவருக்கு பரிசு மழை குவிந்து வரும் நிலையில், சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் சேர்ந்த இயற்கை ஓவியர் கார்த்தி என்பவர் நீரஜ் சோப்ராவை, ஆப்பிளில் அட்டகாசமாக வரைந்துள்ளார் இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது