டைமண்ட் லீக் சாம்பியன் பட்டத்தைச் தட்டித் தூக்கிய நீரஜ் சோப்ரா - பிரதமர் மோடி வாழ்த்து

Twitter Narendra Modi
By Nandhini Sep 09, 2022 11:33 AM GMT
Report

டைமண்ட் லீக் சாம்பியன் பட்டத்தை வென்ற இந்திய வீரர் நீரஜ் சோப்ராவிற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

டைமண்ட் லீக் சாம்பியன் பட்டம் வென்ற நீரஜ் சோப்ரா

சுட்சர்லாந்து நாட்டின் சுரிட்ச் நகரில் டைமண்ட் லீக் தளகள போட்டிகள் நடந்து வருகிறது. இந்நிலையில், ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா கலந்து கொண்டார். தொடரின் இறுதிப்போட்டிக்குள் நுழைந்த அவர் 88.44 மீ தூரம் வரை ஈட்டியை எறிந்து டைமண்ட் லீக் சாம்பியன் பட்டத்தைச் தட்டிச் சென்றுள்ளார்.

இதன் மூலம், டைமண்ட் லீக் தொடரில் நீரஜ் சோப்ரா சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்திய வீரர் என்கிற மாபெரும் சாதனை படைத்துள்ளார். தற்போது நீரஜ் சோப்ராவிற்கு அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் உள்பட பலர் சமூகவலைத்தளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Narendra Modi - Neeraj Chopra

வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி

இந்நிலையில், இந்தியாவின் தங்க மகன் நீரஜ் சோப்ராவிற்கு பிரதமர் மோடி வாழ்த்து கூறியுள்ளார்.

இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், மதிப்புமிக்க டைமண்ட் லீக் டிராபியை வென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்றை மீண்டும் எழுதியதற்காக நீரஜ் சோப்ராவிற்கு வாழ்த்துக்கள். அவர் சிறந்த அர்ப்பணிப்பு மற்றும் நிலைத்தன்மையை வெளிப்படுத்தினார். அவரது தொடர்ச்சியான வெற்றிகள் இந்திய தடகளம் செய்து வரும் பெரும் முன்னேற்றங்களைக் காட்டுகின்றன என்று பெருமையோடு பதிவிட்டுள்ளார்.