டும் ..டும்..நட்சத்திர ஜோடியாக மாறும் நீரஜ் சோப்ரா- மனுபாக்கர்? இணையத்தில் வைரலாகும் வீடியோ
பாரீஸ் ஒலிம்பிக் நிறைவு விழாவில் மனுபாக்கர் மற்றும் நீரஜ் சோப்ரா இருவரும் இணைந்து பேசிக் கொள்ளும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
பாரீஸ்
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் கடந்த ஜூலை மாதம் 26ஆம் தேதி தொடங்கிய ஒலிம்பிக் திருவிழா நேற்றுடன் (ஆகஸ்ட் 11) நிறைவு பெற்றது. இந்தப் போட்டியில் 206 நாடுகளைச் சேர்ந்த 10,500 வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்றனர்.
மொத்தம் 329 விளையாட்டுக்கள் இதில் நடத்தப்பட்டது. அந்த வகையில் இந்தியா சார்பில்,117 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.1 வெள்ளி 5 வெண்கலம் உள்பட 6 பதக்கங்களைக் கைப்பற்றியது.
வைரல் வீடியோ
அதிலும் குறிப்பாக நடப்பு ஒலிம்பிக்கில் இந்தியாவுக்காக முதல் இரண்டு வெண்கல பதக்கங்களை துப்பாக்கிச் சுடுதலில் மனுபாக்கரும் , ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா வெள்ளி வென்று சாதனை படைத்தனர்.
Neeraj Chopra and Manu Bhaker ??
— Avinash Aryan (@avinasharyan09) August 11, 2024
pic.twitter.com/Kj3ZzAUrbv
இந்த நிலையில், பாரீஸ் ஒலிம்பிக் நிறைவு விழாவில் நீரஜ் சோப்ரா- மனுபாக்கர் இருவரும் இணைந்து பேசிக் கொள்ளும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.இதைப் பார்த்த நெட்டிசன்கள்‘அவர்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ளப் போகிறார்களா’ எனக் சமூகவலைத்தளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.