அப்பாவின் அந்த பழக்கம்...லட்சக்கணக்கில் சம்பாதிச்சும் நடுத்தெருவிற்கு வந்தோம் - நீலிமா ராணி வேதனை!!
நடிகை நீலிமா ராணி, தனது தந்தையின் செயலால் இழந்த பணம் குறித்து பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
நீலிமா ராணி
தமிழ் சினிமாவில் நடிகர் கமலின் தேவர் மகன் படம் மூலமாக குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நீலிமா ராணி, அதன் பின்னர் மொழி, தம், ராஜாதி ராஜா, நான் மகான் அல்ல, சந்தோஷ் சுப்ரமணியம் உள்ளிட்ட படங்களிலும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
சின்னத்திரையில் மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வரும் நீலிமா ராணி இதுவரை 50க்கும் மேற்பட்ட தொடர்களில் நடித்துள்ளார். குறிப்பாக வில்லி வேடத்தில் அதிரடி காட்டி வருகிறார்.
அப்பாவின் செயல்
இந்நிலையில், இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில், தனது தந்தை குறித்து பகிர்ந்து கொண்டுள்ளார். அதில், தான் நடித்துக் கொண்டிருப்பது மாதம் ஒரு லட்சம் சம்பாதித்துக் கொண்டிருந்ததாக குறிப்பிட்டு, அந்த பணத்தை எல்லாமே அப்பா சூதாட்டத்தில் விட்டுட்டார் என்றும் வேதனையுடன் குறிப்பிட்டார்.
அது தனக்கு கஷ்டமாக இருந்தது என்றும் ஆனால், அந்த இடத்தில் தான் தளர்ந்து சோர்ந்து போய் அப்பா இப்படி பண்ணிட்டாங்களே என்று நினைக்காமல் இருந்ததாகவும் கூறினார். பணத்தை இழந்த போதிலும். அந்த இடத்தில் தான் தைரியத்தை விடவில்லை என்ற நீலிமா, அந்த தைரியத்தை அப்பா தான் சொல்லித் தந்தார் என்றார்.