தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கவேண்டும்...விடாப்பிடியாக மறுக்கும் கர்நாடகா!!
தமிழகத்துக்கு 15 நாள்களுக்கு தினமும் விநாடிக்கு 3,000 கன அடி காவிரி நீரைத் திறக்க கர்நாடக மாநில அரசுக்கு காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையம் இன்று உத்தரவிட்டுள்ளது.
காவிரி நதிநீர் விவகாரம்
தமிழகம் மற்றும் கர்நாடகத்திற்கு இடையே பெரும் முரண் போக்கான செயல்கள் நடந்து வருகிறது. தமிழக அரசு இது குறித்து சட்டமன்றத்தில் தனி தீர்மானம் கொண்டு வந்த நிலையில், கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் தங்கள் மாநில விவசாயிகளை கைவிட முடியாது என கூறி பதிலடி கொடுத்துள்ளார்.
டெல்டா மாவட்ட விவசாயிகள் போராட்டங்களை கையிலெடுத்தும் தற்போது வரை தமிழகத்திற்கு உரிய நீரை தராமல் காலம் தாழ்த்தி வருகின்றது. இந்த விவகாரங்களில் அடிப்படையில் மேலும் ஒரு காவிரி மேலாண்மை வாரிய கூட்டம் இன்று நடைபெற்றது.
முரண்படும் கர்நாடகா
இந்தக் கூட்டத்தில், காவிரி ஒழுங்காற்று குழுவின் பரிந்துரையை ஏற்று தமிழகத்துக்கு 15 நாள்களுக்கு தினமும் விநாடிக்கு 3,000 கன அடி காவிரி நீரைத் திறக்க கர்நாடக மாநில அரசுக்கு காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது.
இதனிடையே, தமிழகத்துக்கு 3,000 கனஅடி தண்ணீர் திறக்க பிறப்பித்த உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கர்நாடக அரசு கோரிக்கை முன்வைத்துள்ளது.