நீட் தேர்வால் பாதிப்பு உள்ளது" - நீதிபதி ஏ.கே.ராஜன் கருத்து!
சென்னை மருத்துவக் கல்வி இயக்குனகரத்தில்,ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.இராஜன் தலைமையில் முதல் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.
நீட் தேர்வால் தமிழகத்தில் மாணவர்கள் அடைந்துள்ள பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.இராஜன் தலைமையில்,8 பேர் கொண்ட குழுவை தமிழக அரசு அமைத்தது
இதனையடுத்து,நீட் தேர்வு தொடர்பாக,சென்னை மருத்துவக் கல்வி இயக்குனகரத்தில்,ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.இராஜன் தலைமையில் முதல் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.
இந்த கூட்டம் முடிந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த நீதிபதி ஏ.கே.இராஜன்:
நீட் தேர்வால் பாதிப்பு உள்ளதாக குழுவில் உள்ள 8 பேரும் தெரிவித்து உள்ளனர்.மேலும்,நீட் தேர்வின் தாக்கம் குறித்த தகவல்களை சேகரித்து வருகிறோம்.
ஆகவே, வரும் 21 ஆம் தேதி நடைபெறவுள்ள 2-வது கூட்டத்தில் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்கப்படும் என கூறினார்.