தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக வலுக்கும் கண்டன குரல்கள்

Protest MK Stalin Udhayanidhi Stalin R. N. Ravi Need Exemption Bill
By Thahir Feb 04, 2022 06:13 AM GMT
Report

நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பிய ஆளுநருக்கு எதிராக கண்டன குரல்கள் தற்போது அதிகரித்துள்ளன.

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பியதற்கு சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மூலம் கடந்த செப்டம்பர் மாதம் சட்டசபையில் நீட் விலக்கு மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மாசோதாவிற்கு பாஜகவை தவிர மற்ற அனைத்து கட்சிகளுக்கும் ஆதரவாக வாக்களித்தது. இந்நிலையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டு 4 மாதங்களாக கிடப்பில் போடப்பட்ட நிலையில் கடந்த பிப்ரவரி 1-ஆம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி ஆனுப்பினார்.

பொதுவாக ஆளுநர் ஒரு மசோதாவை குடியரசு தலைவருக்கு அனுப்பலாம் அல்லது மீண்டும் பரிசீலனைக்கு திருப்பி அனுப்பலாம்.

இதில் பரிசீலனைக்கு திருப்பி அனுப்பும் பட்சத்தில் அதை மீண்டும் மாநில அரசு சட்ட மசோதாவாக நிறைவேற்றலாம்.

ஒரு வேளை அப்படி மீண்டும் மசோதா நிறைவேற்றப்பட்டால் அதை கண்டிப்பாக ஒப்புதல் அளிக்க வேண்டிய கட்டாயம் ஆளுநருக்கு உள்ளது.

இந்நிலையில் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார் அதில் நீட் விலக்கு மசோதா, ஒட்டுமொத்த தமிழர்களின் எண்ணத் தொகுப்பு.

ஏ.கே.ராஜன் அவர்களின் அறிக்கை மூலம் பிற மாநிலத்தவரும் இதை உணரும்போது ஆளுநருக்கு தெரியாமல் போனது ஏன்?

நம் கல்வி-மருத்துவம், சமூகநீதியின் அடித்தளத்தில் எழுப்பப்பட்டுள்ள கோட்டை என்பதை ஆளுநர் உணரும் காலம் வெகு தொலைவில் இல்லை,

என்று கட்டமாக உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். மேலும் பல்வேறு தரப்பினரும் ஆளுநருக்கு எதிராக கண்டன குரல்களை எழுப்பி வருகின்றனர்.