நீட் விலக்கு தொடர்பான சிறப்பு சட்டப்பேரவை கூட்டம் செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் இன்று கூடுகிறது

Special Meeting Bill NEET Exemption Legislature
By Thahir Feb 08, 2022 02:03 AM GMT
Report

நீட் விலக்கு தொடர்பான சிறப்பு சட்டப்பேரவை கூட்டம் செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் இன்று கூடுகிறது நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்கான மசோதா,

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அனுப்பட்டது.

இந்நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி மசோதாவை கிடப்பில் போட்டார்.இதையடுத்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று நீட் தேர்வு மசோதா குறித்து பேசியிருந்தார்.

இதனிடையே நீட் விலக்கு மசோதாவை தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி திருப்பியனுப்பினார். அது குறித்து விவாதிக்க கடந்த 5ம் தேதி தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது.

அப்போது மீண்டும் சட்டசபையை கூட்டி நீட்விலக்கு மசோதாவை நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்புவது என முடிவு எடுக்கப்பட்டது.

இதன் அடிப்படையில் 8-ந்தேதி சட்டசபை சிறப்பு கூட்டம் நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்திருந்தார்.

அதன்படி இன்று காலை 10 மணிக்கு தமிழக சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டம் செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் நடைபெறுகிறது.

இந்த கூட்டத்தில் நீட் விலக்கு மசோதா மீண்டும் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதலை பெறுவதற்காக ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இன்றைய சட்டசபை சிறப்பு கூட்டம் நேரலையில் ஒளிபரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது