நீட் விலக்கு மசோதா 210 நாட்களாக கிண்டி ஆளுநர் மாளிகை வளாகத்தில் முடங்கி கிடக்கிறது - முதலமைச்சர்..!

Issue CM Governor Bill MKStalin Neet Exemption RNRavi
By Thahir Apr 18, 2022 06:21 AM GMT
Report

ஏழரை கோடி தமிழ் மக்களின் பிரதிபலிக்கும் நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் சட்டமுன்வடிவு கடந்த 210 நாட்களாக கிண்டி ஆளுநர் மாளிகை வளாகத்தில் முடங்கி கிடக்கிறது.

நுாற்றாண்டு கண்ட தமிழக சட்டமன்றத்தில் ஒருமனதாக சட்டமுன்வடிவு கிண்டி ஆளுநர் மாளிகை வளாகத்தில் கவனிப்பாறின்றி கிடக்கிறது.

ஆளுநர் மாளிகை வளாகத்தில் நடந்த தேநீர் விருந்தில் கலந்து கொள்வது என்பது ஒட்டு மொத்த தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை புண்படுத்துவதாகவும், சட்டமன்ற மாண்பினை மேலும் சிதைப்பதாகவும் அமைவதாலே அந்த கொண்டாட்டத்தில் இயலாத நிலை அரசுக்கு ஏற்பட்டது.

இதுகுறித்து மாண்புமிகு ஆளுநர் அவர்களுக்கு நானே ஒரு கடிதம் எழுதியிருக்கேன். அதில் விரிவான விவரங்கள் பெறப்பட்டு இருக்கின்றன.

ஆளுநர் அவர்களுடன் எங்களுக்கு எந்தவிதமான தனிப்பட்ட விரோதமும் இல்லை. தனிப்பட்ட முறையில் தமிழக ஆளுநருக்கும்,தமிழக முதலமைச்சரான எனக்கும் மிக மிக சுமுகமான உறவு இருக்கிறது.

நேரில் பேசும் போது அரசின் செயல்பாடுகளை பாராட்டி பேசியுள்ளார்.நாங்கள் ஆட்சி நடத்த கூடிய விதம் குறித்து பொதுமேடையிலேயே பாராட்டி பேசியிருக்கிறார்கள்.

அது ஊடகங்களில் எல்லாம் வெளியாகியுள்ளது.ஆளுநர் அவர்கள் பழகுவதற்கு மிகவும் இனிமையானவர். எங்களுக்கு அதிகமான மரியாதையை தருகிறார்.

ஆளுநர் என்ற முறையில் அந்த பதவிக்கான மரியாதையை நாங்களும் அளிக்கிறோம்,அளித்துக்கொண்டு இருக்கிறோம்,தொடர்ந்து அளிப்போம் என்றார்.

இது அரசியல் எல்லைகளை கடந்த பண்பாடு.இந்த பண்பாட்டை எந்த நிலையிலும் காக்க வேண்டும்,காப்போம். தனிப்பட்ட முறையில் எனக்கு கிடைக்க கூடிய பாராட்டுகளை விட தமிழ்நாட்டுக்கு கிடைக்க கூடிய நன்மையும்,பலனுமே முக்கியமானது.

அதனையே முக்கியமானதாக கருதுகிறேன்.இந்த சட்டமன்றத்தின் மாண்பை,தமிழ்நாட்டு மக்களின் மாண்பை மதித்து நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அவர்கள் அனுப்பி வைத்தாக வேண்டும். அப்படி அனுப்பி வைக்காதது முறையானது அல்ல.

இந்த சபையின் மாண்புக்கு விரோதமானது. ஆளுநர் அவர்கள் அனுப்பி வைக்காதது எனக்கல்ல இந்த தமிழ்நாட்டு மக்களை அவமதிக்கும் செயலாகும்.

நான் இந்த பேரவைக்கு சொல்ல விரும்புவதெல்லாம் கடந்த 50 ஆண்டு கால பொது வாழ்க்கையில் நான் எத்தனையோ வலிகளையும்,அவமானங்களையும் சந்தித்து வந்திருக்கிறேன்.

அது எனக்கு பொருட்டல்ல,புகழ்ச்சிகளையும்,அவமானங்களையும் புரம் தள்ளிவிட்டு என் கடன் பணி செய்து கிடப்பதே அப்படி தான் செயல்பட்டு வருகிறேன்.

பொதுவாழ்க்கையில் மக்கள் நலன் சார்ந்து செயல்படுவது தான் தலையாய கடமை என்பதை பேரறிஞர் அண்ணா,முத்தமிழ் அறிஞர் கலைஞர் வழியிலே நான் கற்று கொண்டு இருக்கிற பாடமாகும்.

அந்த வழியில் தான் நான் சென்று கொண்டு இருக்கிறேன்.ஆனால் தனிப்பட்ட முறையில் எனக்கு கிடைக்க கூடிய வலி,அவமானங்களை பொறுத்து கொண்டு,

அதனால் தமிழ்நாட்டு மக்களுக்கு ஏதேனும் நன்மை கிடைக்கும் என்றால் புகழ்ச்சிகளையும்,பாராட்டு உரைகளையும் புரம் தள்ளிவிட்டு, அவமானங்கள் மற்றும் வலிகளை தாங்கி கொள்ளவும் நான் எப்போதும் தயாராக இருப்பேன்.

தமிழ்நாட்டு மக்களின் ஒட்டுமொத்த உணர்வாக இருக்க கூடிய நீட் விலக்கு சட்ட முன்வடிவை குடியரசு தலைவருக்கு அனுப்புவது தான் முக்கியம்.

அதற்காக தான் இந்த முடிவு எடுக்கப்பட்டது.தமிழ்நாட்டு மக்களின் நலன் கருதி தொடர்ந்து முயற்சித்து கொண்டே இருப்பேன்.

தமிழ்நாடு முதலமைச்சராக இந்த நுாற்றாண்டு சட்டமன்றத்தின் மாண்பை காக்க கூடியது என் பொறுப்பு. நீட் விலக்கு சட்ட முன்வடிவு மீண்டும் நிறைவேற்றப்பட்டு அனுப்பி இன்றோடு 70 நாட்கள் முடிவடைகின்றன.

இந்நிலையில் நீட் விலக்கு மசோதாவை குடியரசு தலைவருக்கு அனுப்பி வைக்க முடிவு செய்துள்ளதாக ஊடகங்களில் செய்தி வந்து கொண்டிருக்கிறது.

அது தொடர்பான நடவடிக்கைகளை பார்த்துவிட்டு அனைத்து சட்டமன்ற கட்சி கூட்டத்தை கூட்டி அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்றார்.