‘‘ஏழை மாணவனின் மருத்துவகனவில் தீ வைத்தது நீட் தேர்வு’’ - நடிகர் சூர்யா அறிக்கை

exam suriya neet reports
By Irumporai Jun 19, 2021 09:58 AM GMT
Irumporai

Irumporai

in கல்வி
Report

ஏழை மாணவர்களின் எதிர்காலத்தை நீட்தேர்வு சூறையாடுவதாக நடிகர் சூர்யா அறிக்கை வெளியிட்டுள்ளார்.


நீட் தேர்வு குறித்து தொடர்ந்து குரல் கொடுத்து வரும் சூர்யா தற்போது நீட் தேர்வை எதிர்த்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், அரசு பள்ளியில் படித்து உயர்கல்வி பெற மாணவர்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு கல்வியே ஆயுதம்.

ஏழைகளுக்கு ஒரு விதமான கல்வி வாய்ப்பும் பணம் படைத்தவர்களுக்கு ஒருவிதமான கல்வி வாய்ப்பும் இருக்கிற சூழலில், தகுதியை தீர்மானிக்க ஒரே தேர்வு முறை என்பது சமூக நீதிக்கு எதிரானது என கூறியுள்ளார்.

மேலும், நீட் நுழைவுத் தேர்வு வைக்கப்படுவதன் மூலம், மருத்துவராக வேண்டும் என்கிற லட்சியத்தோடு படித்த ஆயிரக்கணக்கான ஏழை மாணவர்களின் கனவில் தீ வைக்கப்பட்டது. அது ஏற்படுத்திய காயத்தின் வடுக்கள் காலத்திற்கும் மறையாது. மாணவர் நலனுக்கும் மாநில நலனுக்கும் நீட் தேர்வு ஆபத்தானது.

தமிழக அரசு நியமித்துள்ள நீதிபதி ஏ.கே ராஜன் அவர்கள் தலைமையிலான குழு நீட் தேர்வின் பாதிப்புகள் குறித்து மக்கள் கருத்து தெரிவிக்கும் படி கேட்டிருக்கிறது.

 இந்தியா போன்ற பல்வேறு மொழி, பண்பாடு, கலாச்சார வேற்றுமைகளை கொண்ட நாட்டில் கல்வி என்பது மாநில உரிமையாக இருப்பது அவசியம் ஆகவே அணைத்து  அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து நீட் தேர்வுக்கு தடைவிதிக்க செயல்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.