‘‘கொஞ்ச நாள் ரெஸ்ட் எடுங்க கோலி’’ ரசிகர்கள் அதிருப்தி

viratkohli INDvWI
By Irumporai Feb 11, 2022 11:50 AM GMT
Report

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியிலும் ரன் குவிக்க தவறிய விராட் கோலி ரசிகர்களின் விமர்ச்சனத்திற்கு உள்ளாகியுள்ளார்.

இந்தியா வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி இந்திய அணியுடன் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இந்த தொடரின் இரண்டு போட்டிகளில் இந்திய அணி அபார வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது

. இரு அணிகள் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்றைய ஆட்டத்தில் விராட் கோலி மந்தமான ஆட்டத்தையே வெளிப்படுத்தினார்.

அதாவது இந்த தொடரின் மூன்று போட்டியிலும் மிக விரைவாக விக்கெட்டை இழந்து ஏமாற்றம் கொடுத்த விராட் கோலி ரசிகர்களின் விமர்ச்சனத்திற்கு உள்ளாகியுள்ளார்.

விராட் கோலியின் ஆட்டத்தினை பார்த்து ஏமாற்றம் அடைந்த ரசிகர்கள் விராட் கோலி சில காலம் ஓய்வு எடுத்துவிட்டாவது மீண்டும் தனது பழைய ஆட்டத்திற்கு திரும்ப வேண்டும் எனவும் ரசிகர்கள் தங்களது சமூக வலைதள பக்கங்கள் மூலம் கோரிக்கை வைத்துள்ளனர்.