பிரபல நடிகர் காலமானார் - திரையுலகினர் அதிர்ச்சி
தமிழில் 'இந்தியன்', 'அந்நியன்', 'பொய் சொல்லப் போறோம்', 'சர்வம் தாள மயம்' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள நடிகர் நெடுமுடி வேணு சற்று முன் காலமானார்.
கடைசியாக தமிழில் 'இந்தியன் 2' திரைப்படத்தில் நடித்துள்ளார். நடிகர் நெடுமுடி வேணு இதுவரை கிட்டத்தட்ட 500 திரைப்படங்களுக்கு மேல் நடித்திருக்கும் நெடுமுடி வேணு 3 தேசிய விருதுகளையும், 6 மாநில விருதுகளையும் வென்றுள்ளார்.
தற்போது 73 வயதான நெடுமுடி வேணு சமீபத்தில் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று மீண்டிருந்தார். நடிகர் நெடுமுடி வேணுவிற்கு திடீரென நேற்று உடல்நலம் சரியில்லாமல் திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் இவரது உடல்நிலையை கண்காணித்து வரும் மருத்துவர்கள் கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவித்திருந்த நிலையில் சற்று முன் காலமானார்.
இவரது மறைவிற்கு ரசிகர்கள் திரைப்பட பிரபலங்கள் தங்களின் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.