சர்வதேச மோசடி கும்பலில் சிக்கிவிட்டாரா பழ.நெடுமாறன்?
அண்மையில் விடுதலை புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் தமிழ் தேசிய முன்னணி அமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் தெரிவித்து அதிர்ச்சியை கிளப்பினார்.
பரபரப்பை ஏற்படுத்தும் பிரபாகரன் விவகாரம்
அதற்கு பல்வேறு தரப்பினரும் பலவிதமான கருத்துக்களை முன் வைத்து வருகின்றனர். பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்று பழ.நெடுமாறன் கூறிய செய்திக்கு இலங்கை ராணுவம் மறுப்பு தெரிவித்தது.
சமூக ஊடகங்களில் இது தொடர்பான விவாதங்களும் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் என்ன உண்மை? என்பது குறித்து ஐபிசி தமிழ் யூடியூப் சேனலுக்கு இந்திய தேசிய லீக் கட்சியின் தலைவர் தடா ரஹீம் நேர்காணல் ஒன்றை கொடுத்தார்.

அப்போது பேசிய அவர், பிரபாகரன் ஐயா பழ.நெடுமாறன் பேசியிருந்தால் அதை ரகசியமாக வைத்திருக்க வேண்டும் என்றார்.
பின்னர் அவருடன் தொடர்பில் இருந்த போராளி சதீஷ் என்பவருக்கு தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு தொகுப்பாளினி தாட்சாயிணியிடம் கேள்வி எழுப்ப கொடுத்தார்.
அப்போது கேள்விகளுக்கு பதில் கொடுத்த சதீஸ் 5 வருடங்கள் நான் பிரபாகரன் கூடவே இருந்தேன். அவர் முள்ளிவாய்க்காலில் இருந்ததாகவும் கூறினார்.