சென்னை மெட்ரோ ரயிலில் மே மாதம் மட்டும் 47.87 லட்சம் பேர் பயணம்!
கடந்த மே மாதத்தில் மட்டும் 47.87 லட்சம் பயணிகள் சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்திருப்பதாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஜனவரி மாதம் முதல் மே மாதம் வரை சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்தவர்களின் மொத்த எண்ணிக்கை குறித்த தகவலை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
அந்த செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ள தகவலின் படி, கடந்த ஜனவரி மாதம் மட்டும் சுமார் 25.19 லட்சம் பேர் சென்னை மெட்ரோவில் பயணம் செய்திருப்பதாகவும், இந்த எண்ணிக்கை அடுத்தடுத்த மாதங்களில் பெருகியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி மாதத்தில் 25.19 லட்சம் பேர் பயணம் செய்துள்ள நிலையில், பிப்ரவரி மாதத்தில் இந்த எண்ணிக்கை 31.86 லட்சமாக உயர்ந்துள்ளது.
Around 47.87 lakh passengers travelled in Chennai Metro Trains during May, 2022 pic.twitter.com/WJ05rYm0AA
— Sangeetha Kandavel (@sang1983) June 1, 2022
அதே போல் பிப்ரவரி மாதத்தை காட்டிலும், கடந்த மார்ச் மாதத்தில் 44.67 லட்சமாக உயர்ந்துள்ளது. ஏப்ரலில் மார்ச்-ஐ விட சற்று அதிகரித்து 45.46 லட்சமாகவும், மே மாத்ததில் பயணிகளின் எண்ணிக்கை 47.87 ஆகவும் உயர்ந்திருப்பதாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டுள்ள குறிப்பில் தெரிவித்துள்ளது.
மேலும், கடந்த 26-ம் தேதியன்று மட்டும் சுமார் 1.9 லட்சம் பேர் பயணம் செய்வதற்காக மெட்ரொ ரயிலை பயன்படுத்தியதாகவும்,
இதில், மே மாதத்தில் கியூ ஆர் கோட் முறையை பயன்படுத்தியவர்களின் எண்ணிக்கை 11.58 லட்சம் என்றும், பயண அட்டையை பயன்படுத்தி பயணம் செய்தவர்களின் எண்ணிக்கை 28.64 லட்சம் என்றும் தெரிவித்துள்ளது.