விழுப்புரம் அருகே பெரியார் சிலை சேதம் - மர்ம நபர்கள் அட்டூழியத்தால் பரபரப்பு
விழுப்புரம் அருகே கம்பி கூண்டை உடைத்து பெரியார் சிலை உடைக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் அருகே கீழ்பெரும்பாக்கம் பஜனை கோவில் தெருவில், வெண்கலத்தில் பெரியார் சிலை அமைக்கப்பட்டிருந்தது. அந்த பெரியார் சிலையை சுற்றி இரும்புக் கம்பியால் கூண்டு அமைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், மர்ம நபர்கள் சிலர் கூண்டில் பூட்டப்பட்டிருந்த பூட்டை உடைத்துவிட்டு பெரியாரின் சிலையின் மூக்கு, கண்ணாடிப் பகுதியை உடைத்து சேதப்படுத்தியுள்ளனர்.
இது குறித்து விழுப்புரம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் சிலையை சேதப்படுத்திய மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.