தாய்நாட்டிற்காக ரத்த காயத்தோடு.. பயங்கரவாதிளை பிடித்த நாய் : குவியும் பாராட்டு

Dog Training India Indian Army
By Irumporai Oct 11, 2022 06:06 AM GMT
Report

ஜம்மு காஷ்மீரில் ராணுவத்தில் உள்ள நாய் ஒன்று பயங்கரவாதிகளால் சுடப்பட்ட பின்னரும் வலியோடு போராடி அவர்களை பாதுகாப்புப் படையினரிடம் பிடித்துக் கொடுத்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தீவிரவாதிகளை தேடும் பணி

ஜம்மு காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டத்தில் தங்ப்வாரா எனும் பகுதியில் பாதுகாப்புப் படையினர் பயங்கரவாதிகளை கண்டுபிடிக்கும் முயற்சியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது ஒரு வீட்டில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல் வந்தது. இதனையடுத்து அந்த வீட்டை நோக்கி ராணுவத்தில் பயிற்சிபெற்ற நாய் ஜூம் என்ற பெயர் கொண்ட அந்த நாய் மிகவும் ஆக்ரோஷமானது, கடுமையான ராணுவபயிற்சிகளை மேற்கொண்டு ராணுவ வீரர்களுக்கு உதவியாக இருந்து வருகிறது.

தாய்நாட்டிற்காக ரத்த காயத்தோடு.. பயங்கரவாதிளை பிடித்த நாய் : குவியும் பாராட்டு | Ndian Armys Assault Dog Terrorists

இந்நிலையில், இந்திய ராணுவத்தினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டபோது ஜூம் என்ற நாய் பயங்கரவாதிகள் இருந்த வீட்டிற்குள் நைசாக நுழைந்தது. இதனை கண்ட பயங்கரவாதிகள் அதன் மீது இரண்டு துப்பாக்கி குண்டுகளை துளைத்தனர்.

இருந்தாலும் பயங்கரவாதிகளை கடுமையாக தாக்கி அவர்களை நிலைகுலையச் செய்தது. அந்த இரண்டு பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர். படுகாயங்களுடன் ஜூம் நாய் தற்போது தீவிர சிகிச்சையில் உள்ளது.

பயங்கரவாதிகளுடன் போராடிய நாய்

இந்த நிலையில் காயமடைந்த ஜூம் குணமடைய  இந்திய ராணுவத்தினர் தங்கள் ட்விட்டர் பக்கத்தில் : நாங்கள் பயங்கரவாதிகளை  எதிர்கொண்டு   தாக்குதல் ந' நடவடிக்கையின் போது  ஜூம் படுகாயமடைந்தது.

தற்போது  ஸ்ரீநகரில் உள்ள ராணுவ கால்நடை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் விரைவில் குணமடைய வாழ்த்துகிறோம். என தெரிவித்துள்ளனர், ராணுவ வீரர்களை குண்டடி பட்டாலும் போராடி காபாற்றிய நாயின் செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.