ஆசிய கோப்பை கிரிக்கெட் : இந்தியா, பாகிஸ்தான் அணிகள் இன்று மோதல்

India Pakistan national cricket team
By Irumporai Aug 28, 2022 03:05 AM GMT
Report

ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடரின் 2-வது லீக் ஆட்டத்தில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் இன்று மோதுகின்றன. இந்தியா-பாகிஸ்தான் மோதல் என்றாலே உலகம் முழுவதும் கிரிக்கெட் ரசிகர்கள் விளையாட்டினை கடந்து உணர்ச்சிபூர்வமான ஆட்டமாக இருக்கும்.

இந்தியா பாகிஸ்தான்

இந்த நிலையில் ஐ.சி.சி. உலக கோப்பை, ஆசிய கோப்பை போட்டிகளில் மட்டுமே தற்போது இவ்விரு அணிகளும் மோதுவதால் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. நடப்பு சாம்பியனான இந்திய அணி ரோகித் சர்மா தலைமையில் களம் இறங்குகிறது.

கேப்டன் ரோகித் சர்மா, துணை கேப்டன் லேகேஷ் ராகுல், முன்னாள் கேப்டன் விராட் கோலி ஆகியோர் இந்திய அணியில் உள்ளனர். குறிப்பாக ஒரு மாத ஓய்வுக்கு பிறகு புத்துணர்ச்சியுடன் களம் திரும்பும் கோலி அட்டகாசசமான ஆட்டத்தை காண்பிப்பாரா என காத்திருக்கிறார்கள்.

ஆசிய கோப்பை கிரிக்கெட் : இந்தியா, பாகிஸ்தான்  அணிகள் இன்று மோதல் | Ndia Pakistan Asia Cup Squads 2022

அதே போல், ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்ட்யா, சூர்யகுமார் யாதவ் கைகொடுத்தால் வலுவான ஸ்கோரை எட்டலாம். மொத்தத்தில் பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் சாகித் அப்ரிடி சொன்னது போல, உச்சக்கட்ட அழுத்தம் நிறைந்த இந்த போட்டியாக இந்த போட்டி இருக்கும்.

ஆசிய கோப்பை

இந்த நிலையில் அணிகளின் விவரங்கள்: இந்தியா: ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா அல்லது தினேஷ் கார்த்திக், புவனேஷ்வர்குமார், அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சாஹல், அவேஷ்கான்.

பாகிஸ்தான்: முகமது ரிஸ்வான், பாபர் அசாம் (கேப்டன்), பஹர் ஜமான், இப்திகார் அகமது, குஷ்தில் ஷா, ஆசிப் அலி, ஹசன் அலி, ஷதப் கான், முகமது நவாஸ், ஹாரிஸ் ரவுப், நசீம் ஷா. இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்குகின்றது 

கடந்த ஆண்டு இதே மைதானத்தில் நடந்த 20 ஓவர் உலக கோப்பை லீக் சுற்றில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானிடம் மோசமாக தோற்றதுடன் அடுத்த சுற்று வாய்ப்பையும் இழந்தது என்பது குறிப்பிடதக்கது.