NDA கூட்டணி வலுவாகிறது; நாளை பிரதமர் மோடி வருகை

DMK BJP
By Fathima Jan 22, 2026 04:47 AM GMT
Report

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நாளை நடைபெறவிருக்கிறது.

இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில், NDA கூட்டணி வலுவடைந்து சென்று கொண்டிருப்பதாக அரசியல் களத்தில் பேசப்படுகிறது.

டிடிவி தினகரன் மற்றும் அன்புமணி ராமதாஸின் வருகை அதிமுக-வுக்கு கூடுதல் பலத்தை அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

நாளை மதியம் 2.15 மணியளவில் சென்னை வரும் பிரதமர் மோடி, 3 மணி முதல் 4.30 மணிவரை கூட்டத்தில் பங்கேற்கிறார்.

பின்னர் மாலை 5 மணிக்கு சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் டெல்லி செல்ல உள்ளார்.