மும்பையில் பரபரப்பு .. ஷாரூக் கான் வீட்டில் போதை பொருள் தடுப்பு பிரிவினர் ரெய்டு!

mumbai sharukhan ncbraide
By Irumporai Oct 21, 2021 08:05 AM GMT
Report

பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் போதை விருந்தில் பங்கேற்றதற்காக அவரை போதைத் தடுப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர். அவருடன் கூடுதலாக 8 பேர் அக்டோபர் 3ஆம் தேதி கைது செய்யப்பட்டனர்.

ஆர்யன் கானுக்கு மும்பை சிறப்பு நீதிமன்றம் ஜாமீன் வழங்க மறுத்துள்ளது. இதைத்தொடர்ந்து ஜாமீன் கோரி மும்பை உயர் நீதிமன்றத்தில் ஆர்யன் கான் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

இந்த நிலையில், நடிகர் ஷாருக்கான் இன்று ஆர்தர் சாலை சிறைக்கு வந்து மகன் ஆர்யன் கானை சந்தித்த நிலையில் மும்பையில் பந்த்ரா பகுதியில் உள்ள ஷாருக்கான் வீட்டிலும் போதைத் தடுப்புப் பிரிவினர் ரெய்டு நடத்தியுள்ளனர்.

இதுமட்டுமல்லாமல், நடிகை அனன்யா பாண்டே, நடிகர் சன்கி பாண்டே ஆகியோரின் வீடுகளிலும் போதைத் தடுப்புப் பிரிவினர் சோதனை நடத்தியுள்ளனர்.

அனன்யா பாண்டே இன்று பிற்பகல் 2 மணிக்கு விசாரணைக்கு வர வேண்டுமென அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுபோக, போதை விருந்து விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ளவர்களிடம் கிடைத்த தகவலின் அடிப்படையில் மும்பையில் அந்தேரி பகுதியில் பல்வேறு இடங்களிலும் போதைத் தடுப்புப் பிரிவினர் ரெய்டு நடத்தியுள்ளது குறிப்பிடதக்கது.