போதை பொருள் வழக்கில் சிக்கிய ஷாருக்கான் மகன் - ரூ.25 கோடி பேரம் பேசிய என்சிபி அதிகாரி!
பிரபல நடிகரான ஷாருக்கான் மகன் போதை பொருள் வழக்கில் சிக்கினார், இவரை விடுவிக்க என்சிபி அதிகாரி ஒருவர் லஞ்சம் வாங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆர்யன் கான்
பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான், அவரது மகன் ஆர்யன் கான் என்பவர் கடந்த 2021ஆம் ஆண்டு மும்பை அருகே போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில் கைதானார்.
இது மும்பை அருகே கோர்ட்டாலியா க்ரூஸ் கப்பலில் என்.சி.பி அதிகாரிகள் சமீர் வான்கடே தலைமையில் சோதனை நடத்திய போது போதைப் பொருள் பயன்படுத்தியதாக, நடிகர் ஷாரூக்கானின் மகன் உள்ளிட்ட 17 பேரை கைது செய்தனர்.
அப்பொழுது, அவரை விடுவிக்க என்சிபி அதிகாரியாக இருந்த சமீர் வான்கடே ரூ.25 கோடியை லஞ்சமாக பெற்றுள்ளார் என குற்றச்சாட்டு எழுந்தது.
லஞ்சம் வழக்கு
இந்நிலையில், அந்தக் குற்றச்சாட்டின் அடிப்படையில் கடந்த சில நாள்களுக்கு முன்பு சிபிஐ அதிகாரிகள், சமீர் வான்கடே மீது லஞ்ச ஊழல் வழக்கைப் பதிவு செய்தனர்.
சிபிஐ அதிகாரிகள் பதிவு செய்திருக்கும் முதல் தகவல் அறிக்கையில் கிடைத்திருக்கும் தகவலின்படி, கே.பி.கோசாவி என்பவர் சமீர் வான்கடே சார்பாக நடிகர் ஷாருக்கானை மிரட்டி ரூ.25 கோடியை லஞ்சமாக வாங்க முயன்றதாகத் தெரியவந்துள்ளது.
மேலும் ஷாருக்கான் தரப்பிலிருந்து ரூ.18 கோடியை சமீர் உள்ளிட்டோர் லஞ்சமாக பெற்றதாகவும், அதில் ரூ.50 லட்சத்தை கோசாவியும், சான்வில் டி சவுசா என்னும் அதிகாரிகள் எடுத்துக் கொண்டதாகவும் முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும், இந்த விவகாரம் குறித்து சமீர் வான்கடே, சென்னையிலுள்ள வரி செலுத்துவோர் சேவை இயக்குநரகத்துக்கு மாற்றப்பட்டார் என்பது தெரியவந்துள்ளது.