மகளிர் தின வாழ்த்து கூறிய லேடி சூப்பர் ஸ்டார்

Nayanthara twitter wishes நயன்தாரா Woman-day lady super star லேடி சூப்பர் ஸ்டார் மகளிர் தின வாழ்த்து
By Nandhini Mar 08, 2022 11:00 AM GMT
Report

தமிழ் சினிமா முன்னணி நடிகையாகவும், நட்சத்திர நாயகியாகவும் நடிகை நயன்தாரா வலம் வருகிறார். இவரை லேடி சூப்பர் ஸ்டார் என்று இவருடைய ரசிகர்கள் அன்போடு அழைத்து வருகிறார்கள். இவருக்கென்றே தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

இவர் பிரபல இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார். இவர்களுடைய திருமணத்தை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள்.  

இந்நிலையில், நயன்தாரா தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், உலகெங்கிலும் உள்ள அனைத்து அழகான, வலிமையான பெண்களுக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள் என்று பதிவிட்டுள்ளார்.

இன்று மகளிர் தினம் உலகமெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று பல பிரபலங்கள், ரசிகர்கள், அரசியல் தலைவர்கள் உட்பட பலர் மகளிர் தினத்திற்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.