நயன்தாராவுக்கு விக்னேஷ் சிவனுடன் திருமணம் இல்லை - வெளியான அதிர்ச்சி தகவல்

நடிகை நயன்தாராவிற்கு செவ்வாய் தோஷம் இருப்பதாகவும், இதனால் அவர் நேரடியாக விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொள்ள கூடாது எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா - பிரபல இயக்குநர் விக்னேஷ் சிவன் இருவருமிடையேயான காதல் விரைவில் திருமணத்தை எட்டுவதற்கான அறிகுறிகள் வெளிப்பட தொடங்கியுள்ளது. அந்த அளவுக்கு அவர்கள் குறித்த ஒவ்வொரு தகவல்களும் தமிழ் சினிமா ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இதனிடையே நயன்தாரா ரசிகர்களுக்கு தற்போது கிடைத்துள்ள தகவல் ஒன்று வித்தியாசமானதாகவும், அதிர்ச்சிகரமானதாகவும் அமைந்துள்ளது. அதாவது நயன்தாரா விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொள்வதற்கு முன்பு, முதலில் ஒரு மரத்தை திருமணம் செய்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. 

சுமார் 6 ஆண்டுகளுக்கும் மேலாக காதலித்து வரும் இருவருக்குமிடையே இந்த ஆண்டு தொடக்கத்தில் ரகசிய நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதாக நயன்தாரா நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்திருந்தார். இருவருக்கும் திருமண தேதி குறிக்கப்பட்டு விட்ட நிலையில் சில சடங்கு சம்பிரதாயங்களை செய்ய வேண்டியுள்ளதால் அவை தள்ளிப்போவதாகவும் தகவல்கள் உலா வருகின்றன. 

மேலும் நடிகை நயன்தாராவிற்கு செவ்வாய் தோஷம் இருப்பதாகவும், இதனால் அவர் நேரடியாக விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொள்ளக்கூடாது என்று இந்து ஜோதிட மரபுகளின்படி அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனால் செவ்வாய் தோஷம் நீங்க விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொள்ளும் முன்பு ஒரு மரத்தை நடிகை நயன்தாரா திருமணம் செய்து கொள்வார் என தகவல் வெளியாகியுள்ளது. 

இதற்கு முன்பு இதே தோஷத்திற்காக அபிஷேக் பச்சனை திருமணம் செய்து கொள்ளும் முன் வாரணாசி, பெங்களூர் மற்றும் அயோத்தி உட்பட மூன்று வெவ்வேறு நகரங்களில் 3 வெவ்வேறு மரங்களை நடிகை ஐஸ்வர்யா ராய் திருமணம் செய்து கொண்டதாக ஊடகங்களில் செய்தி வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.


You May Like This


உலகின் அனைத்துப் பாகங்களிலும் இடம் பெறும் வெளிநாட்டு - உள்நாட்டு அரசியல், சினிமா மற்றும் பொருளாதாரத்தை உடனுக்குடன் அறிந்து கொள்ள லங்காசிறிக் குழுமத்துடன் இணைந்திருங்கள்