அடடா சூப்பர்...நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமண வீடியோ விரைவில் Netflix-ல் வெளியீடு...!

Nayanthara Vignesh Shivan Marriage
By Thahir Jul 22, 2022 06:04 AM GMT
Report

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் திருமண நிகழ்வு காட்சிகளை முதல் சீசனாக விரைவில் Netflix தளத்தில் வெளியாக உள்ளது.

காதல் திருமணம்

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகை நயன்தாரா பிரபல இயக்குநரான விக்னேஷ் சிவனை கடந்த 7 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் கடந்த ஜூன் 9-ம் தேதி சென்னை அருகே உள்ள தனியார் நட்சத்திர திருமணம் செய்து கொண்டனர்.

அடடா சூப்பர்...நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமண வீடியோ விரைவில் Netflix-ல் வெளியீடு...! | Nayanthara Wedding Video Coming Soon On Netflix

இந்த நிலையில் அவர்களின் திருமண நிகழ்வை ரூ.25 கோடி கொடுத்து Netflix நிறுவனம் ஒப்பந்தம் செய்ததாக தகவல்கள் வெளியானது.

இதையடுத்து திருமண நிகழ்ச்சிக்கு வந்தவர்களுக்கு செல்போன் எடுத்து வர அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து அவர்களின் திருமண நிகழ்வுகளை பிரபல இயக்குநர் இயக்கியதாக கூறப்படுகிறது.

விரைவில் Netflix தளத்தில் வீடியோ

திருமண வீடியோ காட்சிகள் Netflix தளத்தில் இதுவரை வெளியாகாத நிலையில் தற்போது விக்னேஷ் தனது சமூக வளைதல பகத்தில் திருமண புகைப்படங்களை பதிவேற்றி வந்தார்.

அடடா சூப்பர்...நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமண வீடியோ விரைவில் Netflix-ல் வெளியீடு...! | Nayanthara Wedding Video Coming Soon On Netflix

இந்த நிலையில் Netflix நிறுவனம் நயன்தாரா விக்னேஷ் சிவனுக்கு நோட்டீஸ் அனுப்பியதாக தகவல்கள் வெளியானது. இந்த நிலையில் Netflix நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து இருந்தது.