நான் இல்லாமல் அதை செய்ய உனக்கு அனுமதி இல்லை - விக்னேஷ் சிவனை எச்சரித்த நயன்தாரா!
நடிகை நயன்தாரா, அவரின் கணவர் விக்னேஷ் சிவனின் இன்ஸ்டாகிராம் பதிவுகள் ட்ரெண்டாகி வருகிறது.
நடிகை நயன்தாரா
இயக்குநர் ஹரி இயக்கத்தில் நடிகர் சரத்குமார் நடித்த 'ஐயா' என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நயன்தாரா. தொடர்ந்து சந்திரமுகி, கஜினி, பில்லா, யாரடி நீ மோகினி, வில்லு உள்ளிட்ட பல ஹிட் படங்களில் நடித்து பிரபலமடைந்தார்.
தற்போது தமிழ் சினிமாவின் 'லேடி சூப்பர்ஸ்டார்' என்று அழைக்கப்படும் நயன்தாரா தமிழ் மட்டுமல்லாமல், ஹிந்தி, மலையாளம் மொழிகளிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் ஷாருக்கானின் ஜவான் திரைப்படத்தில் அவர் நடித்திருந்தார். பல காதல் சர்ச்சையில் சிக்கிய நயன்தாரா கடந்த 2022ம் ஆண்டு இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இன்ஸ்டாகிராம் பதிவு
அண்மையில் விக்னேஷ் சிவன் மும்பை சென்றுள்ளார். அப்போது ஒரு உணவகத்தில் சாப்பிடும்போது, உணவை புகைப்படம் எடுத்து தனது இன்ஸ்டாகிராமில் "நான் மும்பைக்கு வரும்போது எப்போதும் சாப்பிடும் உணவு.
மிகவும் பிடித்த உணவு. என் சில்லி பார்ட்னர் நயனை மிஸ் செய்கிறேன் என்று பதிவிட்டார். அந்த பதிவை நயன்தாரா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் "நான் இல்லாமல் இதை செய்ய உனக்கு அனுமதியில்லை" என்று செல்லமாக எச்சரித்து பதிவிட்டுள்ளார்.