தங்கைக்கு ராக்கி கட்டி ரக்ஷா பந்தன் கொண்டாடிய நயன்தாரா... - வைரலாகும் வீடியோ

Nayanthara Viral Video
By Nandhini 3 மாதங்கள் முன்

ரக்ஷா பந்தன்

இன்று இந்தியா முழுவதும் ரக்ஷா பந்தன் விழா கோலகாலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

ஒரு சிறுமி இன்று ரக்ஷா பந்தன் கொண்டாடும் வகையில், பிரதமர் மோடி கையில் ராக்கி காட்டினாள்.

அதேபோல், கே.ஜி.எஃப் நாயகன் யாஷ் தனது சகோதரி உடன் இந்த விழாவை கொண்டாடினார். இது குறித்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தங்கை கையால் ராக்கி கட்டிக்கொண்ட நயன்தாரா

தற்போது சமூகவலைத்தளங்களில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தனது தங்கை கையால் ராக்கி கட்டிக் கொள்ளும் வீடியோ வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், மேஜைக்கு அருகில் அமர்ந்திருக்கும் நயன்தாரா மற்றும் அவரது தங்கை இருவரும் மாறி, மாறி ராக்கி கட்டிக் கொண்டு, தன் அன்பை வெளிப்படுத்திக் கொள்கின்றனர்.

இந்த பதிவை இன்ஸ்டாவில் வெளியிட்ட டாக்டர் ரினிதா ராஜன், எப்போதும் வலிமையான மனிதர்களில் ஒருவராக இவருடன் நட்பையும், சகோதரத்துவத்தையும், பரஸ்பரம் மரியாதையும் கொண்டிருக்கிறேன் என பதிவிட்டுள்ளார்.   

nayanthara