Wow.... புஸ்.. புஸ்.. சிவந்த கன்னங்களோடு பிரகாசித்த நயன்தாரா... - வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம் - வாயடைத்த ரசிகர்கள்

Nayanthara Viral Photos
By Nandhini Dec 14, 2022 02:12 PM GMT
Report

சமூகவலைத்தளங்களில் தற்போது புஸ்.. புஸ்.. சிவந்த கன்னங்களோடு நயன்தாரா லேட்டஸ்ட் புகைப்படம் வைரலாகி வருகிறது.

நயன்தாரா - விக்னேஷ் சிவன்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இவரும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் கடந்த ஜூன் 9-ம் தேதி காதல் திருமணம் செய்து கொண்டனர்.

திருமணம் நடந்து 4 மாதமே ஆன நிலையில், இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது டுவிட்டர் பக்கத்தில், நயன்தாராவும், நானும் அப்பா, அம்மா ஆகிவிட்டோம் என்று இரட்டை குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்டார்.

தமிழ் சினிமாத்துறையில் சலசலப்பு

திருமணமாகி 4 மாதங்களே ஆன நிலையில், நயன்தாரா-விக்னேஷ் சிவன் இருவரும் வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தைகள் பெற்றுக்கொண்ட சம்பவம், தமிழ் சினிமாவில் பெரும் பரபரப்பும், சலசலப்பும் ஏற்பட்டுள்ளது.

இந்த விவகாரம் சமூகவலைத்தளங்களில் பேசும்பொருளாக மாறியது. வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டுமானால் சில சட்ட விதிகள் நடைமுறையில் உள்ளன. ஆனால் நடிகை நயன்தாரா இந்த விசயத்தில் அனைத்து விதிகளையும் மீறி இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

ஷாக்கான ரசிகர்கள்

சமீபத்தில் சமூகவலைத்தளங்களில் வெளியான புகைப்படத்தில் நயன்தாரா மிகவும் உடல் மெலிந்து காணப்பட்டார். அந்த புகைப்படம் மிகவும் இணையதளத்தில் வைரலானது.

அந்தப் படத்தைப் பார்த்து ரசிகர்கள் பலர் என்ன இது... நம்ம நயன்தாராவா... வயதானவர்போல மாறிட்டாரே என்று ஆச்சரியத்தில் கமெண்ட் செய்தனர்.

nayanthara-viral-photo

லேட்டஸ்ட் புகைப்படம்

தற்போது நயன்தாராவின் லேட்டஸ்ட் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தில் கிழிந்த பேண்ட்டோடு, புஸ்... புஸ்... சிவந்த கன்னங்களோடு கொஞ்சம் வெய்ட் போட்டு பிரகாசித்துள்ளார்.

இந்தப் புகைப்படத்தைப் பார்த்த அவரது ரசிகர்கள் மிகவும் குஷியாகியுள்ளனர். அடடா... என் தேவதை... மீண்டு வந்துவிட்டாள் என்று இன்ப வெள்ளத்தில் கமெண்ட் செய்து வருகின்றனர்.