கூட்டத்தில் நயன்தாரா கையை பிடித்து இழுத்த நபர் ... கடுப்பான விக்னேஷ் சிவன்
தியேட்டருக்கு படம் பார்க்க போன நடிகை நயன்தாராவை ரசிகர்கள் சூழ்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி, நடிகைகள் நயன்தாரா, சமந்தா ஆகியோர் நடிப்பில் அனிருத் இசையமைப்பில் உருவாகியுள்ள படம் "காத்து வாக்குல ரெண்டு காதல்". இப்படம் கடந்த ஏப்ரல் 28 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது.
இதனிடையே சென்னையில் உள்ள தேவி தியேட்டரில் இயக்குநர் விக்னேஷ் சிவன், நடிகர் விஜய்சேதுபதி மற்றும் நடிகை நயன்தாரா உள்ளிட்ட படக்குழுவினர் ரசிகர்களுடன் படம் பார்க்க சென்றனர். திடீரென தியேட்டரில் நயன்தாரா, விஜய்சேதுபதியை பார்த்ததுமே ரசிகர்கள் பெரும் ஆரவாரம் செய்து விசில் அடித்து வரவேற்றனர்.
பலரும் தலைவி, லேடி சூப்பர்ஸ்டார் என கத்தி கூச்சல் போட்டு ஆரவாரம் செய்தனர். நயன்தாராவும் ரசிகர்களின் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி தெரிவித்தார். காரில் இருந்து இறங்கியதில் இருந்தே விஜய்சேதுபதியை ரசிகர்கள் சூழ்ந்து கொண்டு அவருடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.மேலும் நயன்தாரா, விஜய்சேதுபதி மற்றும் விக்னேஷ் சிவன் மூவரும் இணைந்து தியேட்டரில் கேக் வெட்டியும் படத்தின் வெற்றியை கொண்டாடினர்.
சமந்தா படப்பிடிப்புக்காக காஷ்மீர் சென்றுள்ளதால் அவர் இந்நிகழ்வில் பங்கேற்கவில்லை. இந்நிலையில் காரில் இருந்து இறங்கிய நயன்தாராவை ரசிகர்கள் சூழ்ந்த நிலையில் ரசிகர் ஒருவர் அவரின் கையை பிடித்ததாக கூறப்படுகிறது. இதனைப் பார்த்த விக்னேஷ் சிவன் நயனை பாதுகாப்பாக தியேட்டர் உள்ளே அழைத்து சென்றார்.
இதற்கிடையில் இந்த தியேட்டர் விசிட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன.