இரட்டை குழந்தை விவகாரம் ; திடீர் முடிவெடுத்த நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதி
வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தைகள் பெற்ற விவகாரத்தில் ஆவணங்களை ஒப்படைக்க நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதி தெரிவித்துள்ளது.
காதல் திருமணம்
கடந்த 2015ம் ஆண்டு ‘நானும் ரவுடிதான்’ படத்தில் நயன்தாரா நடித்தார். இந்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்கினார்.
இந்த படத்தின் படப்பிடிப்பில்தான் நயன்தாராவுக்கும் விக்னேஷ் சிவனுக்கும் இடையே காதல் மலர்ந்தது. கடந்த 7 வருடமாக காதலித்து வந்த இவர்கள், லிவிங் டு கெதர் முறையில் வாழ்ந்து வந்தனர். இந்த ஆண்டு ஜூன் 9ம் தேதி மாமல்லபுரத்தில் உள்ள ஒரு ரிசார்ட்டில் திருமணம் செய்துகொண்டனர்.
தம்பதிக்கு இரட்டை குழந்தை
திருமணமாகி 4 மாதங்களே ஆன நிலையில் திடீரென கடந்த 9ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை, தங்களுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்திருப்பதாக விக்னேஷ் சிவன் டிவிட்டரில் தெரிவித்தார்.
இந்த தகவல் ரசிகர்களுக்கும் திரையுலகினருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. இது தொடர்பாக விசாரித்ததில், வாடகை தாய் மூலம் நயன்தாரா குழந்தை பெற்றிருப்பது தெரிய வந்தது.
இந்த நிலையில் நயன்தாரா விதிமுறைகளை மீறி குழந்தை பெற்றாரா என விசாரிக்க தமிழக அரசு குழு அமைத்திருந்தது.
இதனிடையே இரட்டை குழந்தைகள் பெற்றது தொடர்பான ஆவணங்களை ஒப்படைக்க உள்ளதாக நயன்தாரா விக்னேஷ் சிவன் தம்பதி தெரிவித்துள்ளதாக மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநரக அதிகாரிகள் தெரிவித்துள்ளன.