நயன் விக்கி குழந்தை விவகாரம் : வாடகைத்தாய் விவகாரத்தில் செக் வைக்கும் சுகாதாரத்துறை
நயன்தாரா ,விக்னேஷ் சிவன் தம்பதி தரப்பில் இதுவரை எந்தவித விளக்கமும் அளிக்கப்படவில்லை என்று சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நயன்தார விக்னேஷ் சிவன்
பிரபல நடிகை நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவன் ஆகியோருக்கு கடந்த ஜூன் 9ம் தேதி திருமணம் நடைபெற்ற நிலையில் ,வாடகை தாய் மூலமாக இந்த நட்சத்திர ஜோடிக்கு இரட்டைக் குழந்தை பிறந்துள்ளது.
கடந்த 9ம் தேதி அந்த குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்த இயக்குனர் விக்னேஷ் சிவன் நயன்தாரா தம்பதி அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர், இந்த நிலையில் வாடகைதாய் குறித்து பல கேள்விகளும் சர்ச்சைகளும் தொடர்ந்து வந்துக்கொண்டிருந்தது.
விதிமுறைகள் மீறினார்களா
இந்த தம்பதியினர் சட்டத்தை முறையாக பின்பற்றி வாடகை தாய் மூலம் குழந்தையை பெற்றுக் கொண்டார்களா என்ற விவாதம் எழுந்தது. தொடர்ந்து வாடகை தாய் விவகாரம் குறித்து விசாரிக்க சுகாதார இணை இயக்குநர் தலைமையில் மூன்று பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்படுகிறது.
இதனிடையே கடந்த டிசம்பர் மாதமே வாடகைத் தாய் முறையில் குழந்தை பெறும் ஒப்பந்தம் பதிவு செய்யப்பட்டிருந்ததாக விசாரணை குழுவிடம் விக்னேஷ் சிவன் நயன் தாரா தம்பதி ஆதாரங்களை சமர்ப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியது.
மேலும், 6 ஆண்டுகளுக்கு முன்பே பதிவு திருமணம் செய்ததிற்கும் அவர்கள் ஆதாரங்களை சமர்ப்பித்ததாகவும் கூறப்பட்டது.
விளக்கம் கொடுக்கவில்லை
இதுவரை விக்னேஷ் சிவன் நயன்தாரா தரப்பில் எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை. வாடகைத்தாய் பற்றி ஆவணங்களை வழங்குமாறு விக்கி நயன் தம்பதிக்கு சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
தொடர்ந்து, வாடகைத்தாய் ஆவணங்களை ஆய்வு செய்த பின்னரே, இருவரிடமும் விசாரணை என்றும் சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.