ஏன் நயன்தாரா.. என்ன கேள்வி சார் இது? - வெளியான ரொமாண்டிக் க்ளிம்ஸ்!

Nayanthara Viral Video Vignesh Shivan Married
By Sumathi Sep 24, 2022 09:41 AM GMT
Report

நயன் - விக்கி திருமண டீசரை நெட்பிளிக்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

நயன் - விக்கி

தமிழ் சினிமாவின் பிரபலமான காதல் ஜோடிகளான நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம் கடந்த ஜூன் 9ஆம் தேதி நடைபெற்றது. பிரம்மாண்டமாக நடைபெற்ற இவர்களின் திருமணத்தில் ரஜினிகாந்த், ஷாருக்கான், விஜய்சேதுபதி, ஷாலினி, சூர்யா மற்றும் ஜோதிகா உள்ளிட்ட பல முக்கிய திரைபிரபலங்கள் கலந்து கொண்டனர்.

ஏன் நயன்தாரா.. என்ன கேள்வி சார் இது? - வெளியான ரொமாண்டிக் க்ளிம்ஸ்! | Nayanthara Vignesh Shivan Wedding Climpse

இவர்களின் திருமணத்தை பிரபல ஓடிடி நிறுவனமான நெட்பிலிக்ஸ் விலைக்கு வாங்கியிருந்தது. இதற்காக 25 கோடி ரூபாய் ஒப்பந்தம் போடப்பட்டது என்றும் கூறிவந்தனர்.

 திருமண டீசர்

திருமணத்தில் போட்டோ மட்டும் வீடியோக்கள் எந்தக் காரணத்தைக் கொண்டும் வெளியே கசிந்து விடாத அளவுக்கு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. திருமணம் நடந்த அன்று திருமண புகைப்படத்தை மட்டும் விக்னேஷ் சிவன் வெளியிட்டிருந்தார்.

சமீபத்தில் கூட நெட்பிளிக்ஸ் நிறுவனத்திற்கும் விக்னேஷ் சிவனிற்கும் சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதாக தகவல்கள் பரவின.. இந்நிலையில் இந்த திருமண வீடியோவின் டீசரை தற்போது நெட்பிளிக்ஸ் வெளியிட்டுள்ளது.

இந்த திருமணத்தை 'Nayanthara Beyond the Fairy tale' எனும் தலைப்பில் நெட்பிலிக்ஸ் ஒளிபரப்பவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.