திருமணத்திற்கு முன்பு போட்டோஷுட் நடத்திய நயன்தாரா - விக்னேஷ் சிவன்..!

Nayanthara Vignesh Shivan Wedding Viral Photos
By Nandhini Jul 21, 2022 07:54 AM GMT
Report

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் திருமணத்திற்கு முன்பு எடுத்த புகைப்படங்கள் தற்போது வெளியான நிலையில் இணையத்தில் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

திருமணம் 

கடந்த மாதம் 9-ம் தேதி நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் மகாபலிபுரத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் திருமணம் செய்து கொண்டனர்.

திருமணத்திற்கு முன்பு போட்டோஷுட் நடத்திய நயன்தாரா - விக்னேஷ் சிவன்..! | Nayanthara Vignesh Shivan Wedding

7 ஆண்டுகளாக காதலித்த வந்த இருவரும் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.

ஹனிமூன்

திருமணம் முடிந்த பிறகு விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா தேனிலவுக்காக தாய்லாந்து நாட்டிற்கு சென்றனர்.

தேனிலவுக்கு சென்ற புகைப்படங்களை தனது சமூக வளைத்தலத்தில் வெளியிட்டார் விக்னேஷ் சிவன். அந்த புகைப்படங்கள் இணையத்தில் அதிகம் ஷேர் செய்யப்பட்டு வந்தது.

திருமணத்திற்கு முன்பு போட்டோஷுட் நடத்திய நயன்தாரா - விக்னேஷ் சிவன்..! | Nayanthara Vignesh Shivan Wedding

விக்னேஷ் சிவனும் திரைப்படங்களை எடுப்பதில் பிசியாக இருந்து வருவதாக கூறப்படுகிறது.

திருமண புகைப்படத்தை வெளியிட்ட விக்னேஷ்

தங்களது திருமண நிகழ்வில் கலந்து கொண்ட பிரபலங்களில் புகைப்படங்களை விக்னேஷ் சிவன் தனது சமூக வளைத்தல பக்கத்தில் வெளியிட்டார்.

திருமணத்திற்கு முன்பு போட்டோஷுட் நடத்திய நயன்தாரா - விக்னேஷ் சிவன்..! | Nayanthara Vignesh Shivan Wedding

தொடர் பதிவுகளால் கடுப்பான Netflix?

நயன்தாரா,விக்னேஷ் சிவனின் திருமணத்தை வீடியோ பதிவு செய்து அதை தனது நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியிட திட்டமிட்டு ஒப்பந்தம் செய்தது அந்நிறுவனம்.

இதையடுத்து திருமண செலவை அனைத்தையும் முழுவதுமாக ஏற்றுக்கொண்டது அந்த நிறுவனம் இதற்காக அந்நிறுவனம் திருமணத்திற்காக ரூ.25 கோடி செலவு செய்ததாக கூறப்படுகிறது.

விக்னேஷ் சிவன் தனது திருமண புகைப்படங்களை சமூக வளைத்தலத்தில் வெளியிட்டு வருவதால் கடுப்பான நெட்பிளிக்ஸ் நிறுவனம் நோட்டீஸ் அனுப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது. 

திருமணத்திற்கு முன்பு போட்டோஷுட்?

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் கடற்கரையில் போட்டோஷுட் நடத்தியுள்ளனர்.கழுத்தில் தாலி இல்லாத நிலையில் இது திருமணத்திற்கு முன்பு எடுக்கப்பட்ட புகைப்படங்களாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.அதன் புகைப்படங்கள் இதோ உங்கள் பார்வைக்காக..

nayanthara

nayanthara

nayanthara

nayanthara